ஐஐஎஸ்ஸி
Dec. 29th, 2005 | 09:46 am
இன்னும் சில ஆண்டுகளில் நூறாண்டு கொண்டாடப்போகும் ஐஐஎஸ்ஸி பரவலாக அறியப்பட்ட ஐஐடி களைப்போன்ற கல்லூரி அல்ல. அது அடிப்படையில் ஒரு அறிவியல்-தொழில்நுட்ப ஆய்வு மைய்யம். முதலிலிருந்தே கற்பித்தல் மட்டுமன்றி ஆய்வு செய்வதும் அதன் முக்கிய பணிகளில் ஒன்று. நான் அங்கே இளநிலைப் பொறியியல் பயிலச் சென்றேன். (அப்போது இளநிலைப் பொறியியலும் இருந்தது. பின்னர் நீக்கிவிட்டார்கள்). கோவையில் மூன்றாண்டுகள் படித்திருந்தாலும் சரியான கிராமத்தானாகத்தான் அங்கே சென்றேன். அங்கிருந்த ஆசிரியர்-ஆராய்ச்சியாளர்-மாணவர் குமுகம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஊழியர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் கன்னடத்தவர். அப்போதைய ஐஐஎஸ்ஸி கிராமத்தைப் போன்றே இருந்தது. நகரிலிருந்து வெளியே, மரங்கள் அடர்ந்து சூழ்ந்த ஒரு வளாகம். மிக இயல்பாகப் பேசும் பழகும் ஆய்வாளர் தொழிலாளர் கூட்டு. சேர்ந்த ஒரே வாரத்தில் அப்போதைய இயக்குனராக இருந்த சதீஷ் தாவன் தம் இல்ல விருந்தொன்றுக்கு இளநிலைப் பொறியியல் பயிலச் சேர்ந்திருந்த புது மாணவர்களில் சிலரை அழைத்திருந்தார். சதீஷ் தாவன் இந்திய வானாராய்ச்சி மற்றும் ஏவுகணை ஆராய்ச்சியின் தந்தை என அறியப்படுபவர். மாணவர்கள் எங்களுக்கு எப்படி இருக்கும். மிக மகிழ்ச்சியுடன் ஐஐஎஸ்ஸிக்கு எங்களை வரவேற்றார். பல சுவையான கதைகளைச் சொன்னார். மிகப்பெரும் குடும்பமாகவே அந்நிறுவனம் இருந்தது. ஆய்வகங்கள் எல்லாம் அடையா நெடுங்கதவுடன் தான் இருக்கும். துறை வேறுபாடெல்லாம் கிடையாது. எந்த ஆய்வகத்திலும் நாங்கள் நுழைந்து நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம். மாணவர் விடுதிகளும் துறைப்படியோ, படிக்கும் பட்டப்படியோ பிரி¢க்கப் பட்டவை அல்ல. அனைவரையும் கலந்தே போட்டிருப்பார்கள். ஆய்வு நிலை மாணவர்களும் முதலாண்டு இளநிலை மாணவர்களும் அறைகளைப் பகிர்ந்து கொள்வது சாதாரணம். வளாகத்தின் சுற்று மதில் சுவர் ஏறக்குறைய இரண்டடி உயரத்துக்கு பிரமாண்டமாக இருக்கும். அதை தாவிக்குதித்துத் தான் நாலாப்புரங்களிலும் திரைப்படம் பார்க்க செல்லுவோம். கேட்டைப்பூட்டி கட்டுப்பாடெல்லாம் கிடையாது. சோம்பேரித்தனம்தான். நூலகத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். உள்ளே போனால் நாள் முழுவதும் படிக்கலாம். ஏதோ இந்திர மண்டலத்தில் இருப்பது போலத்தான் இருந்தது. பிறகு வருடங்கள் செல்லச் செல்ல பல பழைய துறைகள் மூடப்பட்டன. பல புதுத் துறைகள் எங்கும் நிறைய கட்டடங்கள் என துரிதமாக வளர்ந்து விட்டது. இப்போது சென்றால் எல்லாத்துறைகளிலும் இந்திய, பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் அவர்களுக்கேயான ஆய்வுச்சாலைகள் காணப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியாது. மேலும் பொக்ரான் அணுவெடிப்பை அடுத்து முன்னேறிய நாடுகள் போட்ட தடையால் ஐஐஎஸ்ஸியும் மெல்ல மெல்ல ஆய்வகங்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் ஐஐஎஸ்ஸி வளாகத்தினுள்ளே நுழைவது கடினமானதல்ல. இப்போதும் எல்லோருக்கும் அனுமதி தருகிறார்கள். சென்ற வார இறுதியில் பெங்களூரு சென்றபோது ஒரு பழைய புத்தகக்கடையில் என் செல்பேசியைத் தொலைத்து விட்டேன். வீட்டுக்கு அருகிலிருக்கும் ஐஐஎஸ்ஸி வளாக போலீஸ் நிலையத்தில் தான் சென்று முறையீடு கொடுத்தேன். காவலர்கள் சிரித்துக் கொண்டே ஓல்டு ஸ்டூடண்டுதானே சார் நீவு என்று காகிதம் கொடுத்தனர். அதற்கு அடுத்த கட்டடம்தான் டாடா ஆடிட்டோரியம். இன்றைய இந்தியாவின் சொந்த அறிவில் கட்டப்பட்ட அரசுத்துறையைச் சேர்ந்த அணுவியல் மற்றும் வானாராய்ச்சி நிறுவனங்களின் இயக்கம் ஐஐஎஸ்ஸியின் அறிவியல்-தொழில்நுட்ப ஆக்கத்தினாலே பெருமளவு சாத்தியமானது என்று சொன்னால் அது மிகையாகாது. இது இந்தியாவின் மூளையை நேரடியாகத் தாக்கும் பயங்கரவாதம். பெங்களூரு அதன் வளர்ச்சிக்காக கண்காணிக்கப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். என்ன ஒரு சண்டைவந்தால் பாகிஸ்தான் ஒரு அணுகுண்டு போடும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றே இருந்தோம். ஆனால் அது பயங்கரவாதத்தினால் நேரடியாகத் தாக்கப்படும் என்று நம்பவில்லை.இன்று சென்னையில் இருக்கவே பிடிக்கவில்லை. உடனே செல்லவேண்டும் போல் இருக்கிறது.
. இப்போது மோசமான நிலையில் காயப்பட்டிருக்கும் விஜய் சந்த்ரு, கணிப்பொறி இயல் துறையில் பேராசிரியர். கணினி வரைவியல் துறையில் முக்கியமான சில ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதி உள்ளார். ACM கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆராய்ச்சி இதழை படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அபயங்கருடன் சேர்ந்து கணித அடிப்படையில் தேர்ந்த கட்டுரைகள் எழுதியவர். பேச பழக மிக இனிமையானவர். நண்பனின் ஆசிரியர் என்ற முறையில் சில முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன். சிம்ப்யூட்டர் வடிவமைத்த குழுவில் ஒருவர். ஸ்றேண்ட் ஜெனோமிக்ஸ் எனும் இந்தியாவின் சிறந்த உயிரியல்கணினி நிறுவனங்களில் ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார். மிக அதிர்சியூட்டும் செய்தி இது.
It is later than we think.
. இப்போது மோசமான நிலையில் காயப்பட்டிருக்கும் விஜய் சந்த்ரு, கணிப்பொறி இயல் துறையில் பேராசிரியர். கணினி வரைவியல் துறையில் முக்கியமான சில ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதி உள்ளார். ACM கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆராய்ச்சி இதழை படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அபயங்கருடன் சேர்ந்து கணித அடிப்படையில் தேர்ந்த கட்டுரைகள் எழுதியவர். பேச பழக மிக இனிமையானவர். நண்பனின் ஆசிரியர் என்ற முறையில் சில முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன். சிம்ப்யூட்டர் வடிவமைத்த குழுவில் ஒருவர். ஸ்றேண்ட் ஜெனோமிக்ஸ் எனும் இந்தியாவின் சிறந்த உயிரியல்கணினி நிறுவனங்களில் ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார். மிக அதிர்சியூட்டும் செய்தி இது.
It is later than we think.
அருள் செல்வன். க. | Leave a comment {3} | Add to Memories | Tell a Friend
இரண்டு
Dec. 2nd, 2005 | 04:19 pm
--
ஒன்று:

இரண்டு:

-
ஒன்று:

இரண்டு:

-
அருள் செல்வன். க. | Leave a comment {6} | Add to Memories | Tell a Friend
பூச்சிகளின் அரட்டை
Nov. 29th, 2005 | 09:41 pm

"என்னோடு கல்யாணம் பண்ணிட்டு புத்துக்கு வா, உன்னை ராணி மாதிரிப்
பாத்துப்பேன்னு சொன்னா இப்பிடி நம்பாம முழிக்கிறியே ..."
பூச்சிகளின் அரட்டை
சுட்டி
